குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

116
0
Spread the love

கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு பெற முடியாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

நிலைமையை சீராக்க தொழிநுட்பக்குழு பணியாற்றி வந்த நிலையில் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here