பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு – 584 சந்தேகநபர்கள் கைது

102
0
Spread the love

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (20.02) மாத்திரம் 29,165 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 584 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 18 சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 249 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 130 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 286 சாரதிகளும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 57 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here