கிளிநொச்சியில் இரவு நேரக் குப்பைக் கொட்டல்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்

16
0
Spread the love

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி இரவோடு இரவாகக் குப்பைகளைக் கொட்டும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் முறையற்ற குப்ப அகற்றும் பழக்கத்தினால் பிரதேசம் முழுவதும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இரவில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு கேமராக்கள் மூலமாகக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, முன்பு 10,000 ரூபாவாக இருந்த அபராதத் தொகை தற்போது 1 இலட்சம் தொடங்கி 10 இலட்சம் ரூபாய் வரை அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் பாலிதீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி எனத் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே பொதுமக்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதேச சபையில் போதுமான பணியாளர்கள் இல்லாத சவால்களுக்கு மத்தியிலும், சொந்தக் குப்பைகளை முறையாகச் சேமித்துச் சபையின் வண்டிகளிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களைத் தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here