நேற்று ஒரே நாளில் 958 பேர் கைது

171
0
Spread the love

முழு நாடும் ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று (22.02) 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

968 சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 07 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

அத்துடன், ஒரு சந்தேகநபர் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 5 சந்தேகநபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here