ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் பேசிய, ஜெய்ஷங்கர்

32
0
Spread the love

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின.

தொடர்ந்து 5 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

மேற்காசியாவில் நடந்து வரும் மோதலுக்கு இடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (5) தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை, தொலைபேசி வழியே இன்று மதியம் தொடர்பு கொண்டு பேசினேன் என கூறியுள்ளார்.

எனினும், அந்த உரையாடல் தொடர்பான பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஈரான் மற்றும் வளைகுடா பகுதியில் அதிகரித்து உள்ள மோதலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொண்ட இந்தியா, மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

எனினும், தொடர் மோதலால் மேற்காசியாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here