டேங்கரில் தன்னுடைய மகளுடன் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

76
0
Spread the love

போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் தன்னுடைய மகளுடன் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பயணித்த புகைப்படத்தை அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது போர் நடத்தி வரும் அமெரிக்காவின் அடுத்த குறி, வடகொரியா என்று சொல்லப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வடகொரிய தனது பலத்தை வெளிக்காட்டி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, வடகொரியாவின் ஆட்சிப் பொறுப்பை அடுத்து தன்னுடைய மகள் கிம் ஜு ஏவிடம் ஒப்படைக்க அதிபர் கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளதாக தென்கொரியா உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இதனை உறுதி செய்யும் விதமாகவே, கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஏவுகணை சோதனை போன்ற நிகழ்வுகளில் மகளையும் பங்கெடுக்க ஜனாதிபதி கிம் ஜாங் உன் செய்து வருகிறார்.

அண்மையில் நடந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சிகளைப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், அவரது இளம் மகளும் இணைந்து டேங்கரில் பயணிக்கும் புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

நேற்று நடந்த டேங்கர் மற்றும் படைப் பிரிவினரின் போர் பயிற்சிகளை கிம் நேரில் கண்காணித்ததாகவும், போர் தயாரிப்புகளை முழுமையாக முடிக்குமாறு அவர் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here