சுரேஷ் சலே மீண்டும் சிஐடியிடம் ஒப்படைப்பு

15
0
Spread the love

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், வைத்தியசாலை அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அவர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றின் நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here