கடவத்தையில் விபத்து – மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

91
0
Spread the love

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடவத்தை, இந்தகஹமுல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர், அதே திசையில் பயணித்த மோட்டார் கார் ஒன்றுடன் மோதி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here