கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி சோதனை: ரூ.5.1 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

66
0
Spread the love

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 22 வயதுடையவர்கள் என்றும் மற்றொருவர் 33 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூவரும் இன்று (15) அதிகாலை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் TG-307 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த மூன்று பயணப் பைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஒப்பனைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 96 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here