பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் – சஜித்

13
0
Spread the love

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் தமது சித்திரை புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது நம்மிடம் உள்ள மகத்தான கலாசார விழாவாகும்.

ஒரு கலாசார விழாவின் அடித்தளம் உருவாகுவது அதில் காணப்படும் ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் பொழுதுபோக்கு காரணிகளின் அடிப்படையில் ஆகும்.

சிங்கள தமிழ் புத்தாண்டு இந்த அனைத்து காரணிகளின் வழியாகவும் நமக்கு ஒரு மகத்தான பாரம்பரியத்தின் மரபுரிமையை வழங்கியுள்ளது.

இந்த மரபுரிமையைப் பாதுகாத்து எதிர்காலத்திற்காகப் பேணிக்காத்துச் செல்வது நமது கடமையாகும்.

அத்தகைய மரபுரிமையின் செயல்முறையில் சமூகத்தினுள் நிச்சயமற்ற உணர்வுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுவது அல்லது அத்தகைய நிகழ்வுகளை சரியான முறையில் கையாளுவதில் அரசாங்கம் தவறுவதென்றால், அது நம்மிடம் உள்ள கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை புறக்கணிப்பதாகும்.

புத்தாண்டு சுப நேரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அரசாங்கம் தலையிட்ட விதம், நமது கலாசாரத்தின் மதிப்பீடுகள் மீது அது காட்டும் அக்கறை கேள்விக்குரியது என்பதை வெளிப்படுத்துகின்றது.

புத்தாண்டின் உதயம் என்பது கடந்த தவறுகளை திருத்திக்கொண்டு புதிய வருடத்தில் அடியெடுத்து வைப்பதாகும். கடந்த ஆண்டில் நாட்டு மக்கள் பல சவால்களை எதிர்கொண்டனர் என்பது இரகசியமில்லை.

கடுமையான பொருளாதார அழுத்தத்தில் சமூகத்தின் எல்லா தரப்பு மக்களும் மன நிம்மதியின்றி தம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில் தேவையானது குறுகியகால தீர்வுகளல்ல, நீண்டகால தீர்வுகளின் வழியாக மக்களை வலிமைப்படுத்துவதாகும்.

உதயமாகும் புத்தாண்டில் அதற்கான நிலையான செயல்திட்டத்திற்கு நாம் முழுமையாக அர்ப்பணிப்போம் என்பதை தெரிவிக்கின்றேன்.

சிங்கள தமிழ் புத்தாண்டு அமைதியாக நமக்குச் சொல்லிக்கொடுக்கும் நல்லிணக்கம் பற்றிய மகத்தான பாடத்தை வழிகாட்டியாகக் கொண்டு அதற்காக நாம் அர்ப்பணிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here