புத்தாண்டு காலப்பகுதியில் 36 வீதி விபத்துகள் – 35 மோதல்கள்

78
0
Spread the love

கடந்த 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

அந்த விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13ஆம் திகதி 19 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், புத்தாண்டு தினமான 14ஆம் திகதி 17 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த இரண்டு நாட்களில் மாத்திரம் 35 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 13ஆம் திகதி 14 மோதல்களும், நேற்று மற்றும் இன்று முற்பகல் வரையான காலப்பகுதியில் 21 மோதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here