மிதிகம பகுதியில் நேற்று (17.04) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







