ஹட்டனில் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின

9
0
Spread the love

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21.04) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில் அமைந்துள்ள 50 தோட்ட வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, ஹட்டன் போடைஸ் ஊடாக டயகம செல்லும் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள்
முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டப்பகுதி ஊடாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடை வான்பாய்ந்ததன் காரணமாகவே,
இவ்வாறு தோட்ட வீடுகளும் பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here