மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (MSEDO) ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று இன்றைய தினம் (25.04) சனிக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில், நாடுகளை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கு பெரும் சவாலாக இருக்கும் பயங்கரவாதம், மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம்( PTA ) பயங்கரவாத த்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் PSTA சட்டம் தொடர்பில் சட்டத்தரணி இம்மானுவேல் அல்வின் கமல் ராஜ் வளவாளராக கலந்து கொண்டு தெளிவு படுத்தினார்.
குறித்த செயலமர்வில் மன்னார் மெஸிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, திட்ட முகாமையாளர் எஸ்.எஸ். ஜான்சன் திட்ட இணைப்பாளர் பி. ஜூலியஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.







