குருவிட்ட சிறைச்சாலையில் நேற்று (06) இரவு கைதிகள் குழுவொன்றுக்கிடையில் ஏற்பட்ட பதற்றநிலை இன்று (07) காலை மீண்டும் வெடித்துள்ளது.
பதற்றத்தின் போது சிறைச்சாலை வைத்தியசாலை கட்டடம் மற்றும் ஏனைய சொத்துகளுக்கு கைதிகளால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நான்கு கைதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







