தேர்தல்கள் தொடர்பில்  PAFFREL அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தெளிவூட்டல் செயலமர்வு மன்னாரில்

18
0
Spread the love

இலங்கையின் தேர்தல்கள் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் “Active Citizens for Elections and Democracy (ACED)” திட்டத்தின் கீழ் PAFFREL அமைப்பினால் தெளிவூட்டல் செயலமர்வு ஒன்று மன்னாரில் நடாத்தப்பட்டது.

இன்று (28.04) செவ்வாய்கிழமை காலை மன்னார் ஆகாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இச்செயலமர்வில்,

தேர்தல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, மக்கள் பங்கேற்பு, மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றன. மேலும், சமூக அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன் (Funded by the European Union) முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்,

PAFFREL அமைப்பின் தேசிய இணைப்பாளர் சுஜீவ கயனத், உப தேசிய இணைப்பாளர் எஸ்.சத்தியராஜ் கலந்துகொண்டதோடு,

முன்னைநாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருமான எம்.எம். முஹமட் வளவாளராகக் கலந்துகொண்டு தேர்தல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

குறித்த செயலமர்வில் 25 இற்கும் மேற்பட மன்னார் சிவில் சமூகப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here