அரச நிதிப்பற்றியக் குழுவில் நாளைய (30.04) தினம் முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்சன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
அது தொடர்பான கடிதம் அரச நிதிப்பற்றியக் குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக திறைசேரியின் செயலாளர் நாளைய தினம் நிதிப் பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை திறைசேரியினால் செலுத்தப்பட்ட கடன் தொகையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை சைபர் குற்றவாளிகள் ஊடுருவி தமது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு, நிதியமைச்சின் செயலாளர் ஹர்சன சூரியப்பெருமவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







