வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை

42
0
Spread the love

வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (03.05) பகல் வேளையில் வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும்.

இந்த நேரத்தில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், உடல் உழைப்பில் ஈடுபடுவதாலும் அதிக சோர்வு ஏற்படக்கூடும்.

தொடர்ந்து இவ்வாறான சூழலில் செயற்படுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புக் குறைபாடு ஏற்பட்டு, தசைப்பிடிப்பு உண்டாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here