02 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை

14
0
Spread the love

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று (22.05) காலை 6 மணிக்கு இந்த எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.

அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்கை, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, அயகம, பெல்மதுல்ல, கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல, களுவானை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் ​கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here