உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

46
0
Spread the love

உலகச் சந்தையில் பிரெண்ட்  வகை கச்சா எண்ணெய் விலை இன்று (18) 67 சதம் அல்லது 0.65 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 102.75 டொலராகப் பதிவாகியுள்ளது.

நேற்று (17) உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

இதேவேளை, அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 1.18 டொலர் அல்லது 1.23 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை 95.03 டொலராகப் பதிவாகியுள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் அரசாங்கத்திற்கும் குர்திஷ் அதிகாரிகளுக்கும் இடையில் துருக்கியின் செய்ஹான் துறைமுகம் ஊடாக மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை ஆரம்பிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, மத்திய கிழக்கின் எண்ணெய் விநியோகத்தில் இந்தச் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here