மன்னாரில் மாவட்ட மட்ட வீதி நாடகப் போட்டி -கலையருவி கலாமன்றம் முதலிடம்

49
0
Spread the love

2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட வீதி நாடகப் போட்டி இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ‘கலையருவி கலாமன்றம்’ அணியினர் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டனர். மாந்தை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ‘மாந்தை மேற்கு கலை கலாசார மன்றம்’ அணியினர் இரண்டாம் இடத்தையும், மடு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ‘கலைமகள் கலாமன்றம்’ அணியினர் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.
வடக்கு மாகாணத்தின் கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், மன்னார் மாவட்டச் செயலாளர்,மேலதிக மாவட்டச் செயலாளர்,உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here