மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மேற்கு பகுதியில் வசித்து வந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் மாமனார் இன்று (12.06) அதிகாலை 2.00 மணியளவில் மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
உயிரிழந்தவர் பெரியபண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த பிரகீசன் பசில் அன்ரன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







