டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 40 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 25 கிலோ விதை நிலக்கடலை வழங்கும் நிகழ்வு இன்று (12.06)காலை 10.00 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனமான(MSEDO) அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது,மடு,
நானாட்டான் மற்றும் முசலி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 விவசாய குடும்பங்களுக்கு தலா 25 கிலோ விதை நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டது.
வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் நிதி உதவியுடன் மெசிடோ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில்,
மறுவயல் பயிற்செய்கைக்கான பாடவிதான உத்தியோகத்தர் டெஸ்மன் மார்க் கலந்து கொண்டு நிலக்கடலை பயிர்ச் செய்கைக்கான சிறந்த வழிகளை விளக்கவுரை மூலம் விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தினார்.
குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் .
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில்,மெசிடோ நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.







