செம்மணி அகழ்வு பணிகள்24 ஆவது நாளாக இன்றும் முன்னெடுப்பு

68
0
Spread the love

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றையதினம் 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.

இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், குழந்தையொன்றினுடையதாகும்.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here