மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விதாதா விற்பனைக் கண்காட்சி மற்றும் மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட தொழிற்சந்தை இன்று (15) காலை 9.30 மணியளவில் நகர மத்திய சுற்றுவட்டத்திற்கு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வை மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விற்பனைக் கண்காட்சி மற்றும் தொழிற்சந்தையில் இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொண்டதுடன், உள்ளூர் உற்பத்திகளையும் ஆர்வமுடன் கொள்முதல் செய்தனர்.
இக்கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தங்களது உள்ளூர் உற்பத்திகளை காட்சிப்படுத்தினர். இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்,மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், பொதுமக்களும் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர் .






