ஏ9 பிரதான வீதியில் கோர விபத்து இருவர் பலி

234
0
Spread the love

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளை, பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், குறித்த லொறியானது தரித்து நின்ற பட்டா மீது கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here