மன்னார் தீவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

69
0
Spread the love

மன்னார் தீவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, 119 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

மன்னார் தீவுக்குள் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆண்டுதோறும் பாரிய சவாலாக இருந்து வரும் வெள்ளப் பெருக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 119 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஊடாக மன்னார் தீவில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதுடன், மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்கக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் வடிகால் வசதிகள் மற்றும் நீரினை வெளியேற்றக்கூடிய வகையில் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here