மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு.

43
0
Spread the love

மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான புகையிரத சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் இன்று (19) மதியம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு தலைமன்னாருக்கிடையேயான புகையிரத சேவைகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் தலைமன்னார் – மதவாச்சி புகையிரத பாதையில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே
இந்த சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சேதமடைந்த புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து,தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக இன்று மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான புகையிரத சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வழமையான புகையிரத சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here