தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

7
0
Spread the love

தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசு 755 கோடிரூ பா நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் படி தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

அத்துடன் ஊட்டச்சத்துப் பொருட்கள் உள்ளிட்ட பல பயன்பாட்டு பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தேர்தல் பிரச்சாரத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபா, பெண்களுக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லாப் பேருந்து மற்றும் வருடத்திற்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர் என பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

திட்டங்கள் எப்போது செயற்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவிய நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here