நாடு முழுவதும் அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு

36
0
Spread the love

பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ‘பொசன் வாரத்தை’ முன்னிட்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மிஹிந்தலை, மதவாச்சி, மற்றும் மஹாவிலச்சிய (Mahawilachchiya) ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட
பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும், எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமம் பெற்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here