பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மன்னாரில் கடற்கரை சிரமதானம்

94
0
Spread the love

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் அமைப்பும் இளைஞர் அமைப்பும் இணைந்து, “பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (06.07.மன்னாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் கடற்கரை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.

இன்று மாலை 3 மணியளவில் மன்னார் பாலத்தடிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இந்நிகழ்வு, மன்னார் நீதிமன்ற வளாகம் மற்றும் மன்னார் மீன் சந்தையை அண்டிய கடற்கரைப் பகுதிவரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கடற்கரையில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாவட்ட செயலகம், மன்னார் நகர சபை மற்றும் பனங்கட்டுகொட்டு மீனவ சங்கம் ஆகியன ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.

சிரமதானத்தின் போது சேகரிக்கப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் மன்னார் நகர சபையின் ஊடாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உரிய முறையில் அகற்றப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் சிரமதானத்தை பெண்கள் திட்டச் செயற்பாட்டாளர் பிரியந்தா மற்றும் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here