மன்னார் உப்புகுளம் கிராம பகுதியில்
அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளத்தில் நிறைந்து காணப்படும் சம்பு புற்களிலிருந்து பஞ்சு துகள்கள் வெடித்து அப்பகுதி முழுவதும் பரவி வரும் நிலையில் அவை உணவு மற்றும் சுவாசங்களில் கலப்பதால்
அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில். இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மன்னார் நகர முதல்வரிடம்
உப்பு குளம் கோவில் நிர்வாக சபையினர் மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் மன்னார் நகர சபையின் உப்பு குளத்தினை சேர்ந்த உறுப்பினர்கள்
வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்,
இன்றைய தினம் (11.07) சனிக்கிழமை மன்னார் நகர சபையும் ராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் சம்பு புற்களை அழித்து அவற்றை துப்புரவு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மன்னார் நகர முதல்வர் தெரிவிக்கையில்’
“மன்னாரில் இது போன்ற 14குளங்களில் இவ்வாறு சம்பு புற்கள் வளர்ந்து மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நிலை
காணப்படுகிறது எனவே இந்த குளங்களை துப்புரவு செய்யுமாறு நான் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பி இருந்தேன். ஆனால் அவர்கள் இது தொடர்பில் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் இந்த குளங்களை துப்புரவு செய்து பேண வேண்டும் இல்லையேல் அவற்றை நகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எமது நகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக கமநல சேவைகள் திணைக்களத்திற்கெதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு உள்ளேன்.
இந்த குளங்கள் நகர மத்தியில் காணப்படுவதால் அது மக்களின் சுகாதாரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது எனவே இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் உரிய திணைகள அதிகாரிகளிடமும் நான் வேண்டுகோள் விடுகின்றேன் தயவுசெய்து இந்த குளங்களை துப்புரவு செய்து பேணுங்கள் அல்லது மன்னார் நகர சபையிடம் ஒப்படையுங்கள் என்று தெரிவித்தார்.







