இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள், புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை அதாவது OCI பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், செந்தில் தொண்டமானுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI ஐ வழங்குங்கவதற்கான நடைமுறையை இலகுப்படுத்திய போதிலும், OCI வீசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா பெறுமதியில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே OCI வீசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தது குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.







