யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்றைய அகழாய்வு பணிகளின் போது
மேலும் 9 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்மைய, செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
434 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 429 ஆம் இலக்க மனித என்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற 2ஆம் கட்ட அகழ்வு பணிகளின் போதும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த மனித என்புக்கூடு கண்டெடுக்கபட்டது.
இதேவேளை செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூது குழு அடுத்த
வாரம்இலங்கை வருகை தரவுள்ளது.







