கல்கிசை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் வைத்தியசாலையில்

72
0
Spread the love

தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் “செண்டோ” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here