பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சீன தயாரிப்பு சிகரெட் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிகரெட் தொகையை கம்போடியாவில் கொள்வனவு செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு கொண்டு சென்று பின்னர் இருவரும் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த இருவரதும் பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 53 ஆயிரத்து 200 சிகரெட்டுகளைக் கொண்ட 266 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பையை சேர்ந்த 26 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.






