யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதி மக்கள், தமது காணிகளை விடுவிக்கக் கோரி ஐந்தாவது வாரமாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலாலி சந்தியில் (Palaly Junction) இன்றும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 36 ஆண்டுகளாக தமது காணிகளை இழந்து வாழ்ந்து வரும் மக்கள், இராணுவ வசமுள்ள தமது நிலங்களை மீள விடுவிக்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்தி வரும் நிலையில் தாம் நீண்டகாலமாக வீடுகள் மற்றும் சொந்த நிலங்கள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தமது சொந்த காணிகளையும் வீடுகளையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






