யாழ்ப்பாணம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கக் கோரி, வசாவிளான் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் வசாவிளான் சந்தியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 36 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பாரம்பரிய காணிகளை விடுவித்து, மீள்குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மயிலிட்டி மற்றும் பலாலியில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வசாவிளான் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதற்கமைய பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது மூன்று இடங்களில் காணி மீட்புக்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்தக் காணிகளை உடனடியாக உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







