‘டியூட்’ பட ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு

62
0
Spread the love

‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here