இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், 15 வயது மகள் காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளித்த தாய் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், சிறுமியை பெற்ற தாயே ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. முழுத் தொகையும் கிடைக்காததால் மகளை காணவில்லை என பொய்யான புகார் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸார் சிறுமியை உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் இருந்து மீட்டு, சம்பவத்துடன் தொடர்புடைய இடைத்தரகர் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.






