கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமண நிகழ்வு கொழும்பிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தினித் சிந்தக கருணாரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த அரசியல் பிரமுகர்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், எனினும் அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதிவும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






