மன்னாரில் 149 மாணவர்களுக்கு சமுர்த்தி புலமைப்பரிசில் மற்றும் 15 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று(18) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கே. காந்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், G.C.E. O/L பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார வசதி குறைந்த சமுர்த்தி பயனாளர் குடும்பங்களைச் சேர்ந்த 149 மாணவர்களுக்கு இரண்டு வருட புலமைப்பரிசில் திட்டத்திற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை, அஸ்வெசும சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ், 15 மீனவ பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், மீனவ குடும்பங்களின் நிலையான வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் சமூக வலுவூட்டலுக்கான முக்கிய திட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது







