கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் மீட்பு

160
0
Spread the love

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றைய தினம்(01.09) புதன் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினைத் துப்பரவு செய்யும் போது பள்ளம் தோண்டிய நிலையில், வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன. உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லின்ரன் யாழ்ப்பாண செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here