ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுத்து அரசியலில் போட்டியிடக்கூடிய தலைவர் எதிர்க்கட்சிகளில் எவரும் இல்லை என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகங்களுக்குத்தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டபோது, தைரியமாகப் பொறுப்பேற்று நாட்டை மீட்சிப் பாதைக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வழிநடத்தியவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் மக்களின் நலனை உறுதிப்படுத்தவுமே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் சீர்திருத்தங்களை விமர்சித்து எதிர்க்கட்சிகள் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் மையமாகக் கொண்டே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.







