சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு செய்த 63 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

115
0
Spread the love

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (NILET) நடாத்தப்பட்ட சிங்கள மொழிக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (04) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் மாவட்டச் செயலக ஜெயிக்கா மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட குறித்த 150 மற்றும் 120 மணித்தியால பயிற்சி நெறியில் கலந்துகொண்டு அதனை வெற்றிகரமாக நிறைவு செய்த 33 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 30 மாணவர்கள் என மொத்தம் 63 பேர் இன்றைய நிகழ்வில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பயிற்சியை நிறைவு செய்தவர்களால் சிங்கள மொழியில் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. குறிப்பாக நாடகங்கள், குழுப்பாடல்கள் மற்றும் நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிங்கள மொழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவகத்தின் தலைவி சந்திரா விக்கிரமசிங்க நிறுவனத்தின் இணைப்பாளர் கல்யாணி தங்கராஜா, மன்னார் வலயக்கல்விப் பணிமனையின் உதவிப் பணிப்பாளர் ஜி.ஆதவன்,

மற்றும் இப்பயிற்சி நெறியின் வளவாளர்களான டபிள்யு.மஞ்சுளா, ஏ.நிரஞ்சன் கே.பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சி நெறியானது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here