சிராந்தி ராஜபக்ச தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பம் —மகரகம அபேஷா வைத்தியசாலை விவகாரம்

85
0
Spread the love

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
PET Scan இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் சிரிலிய சவிய அமைப்பு நிதியுதவி கோரியதாகவும், இதன்போது தேசிய சேமிப்பு வங்கி ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், CIDக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட PET Scan இயந்திரம் சிரிலிய சவிய அமைப்பினால் கொள்வனவு செய்யப்படவில்லை என்றும், அது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இயந்திரத்தை கொள்வனவு செய்வதாகக் கூறி நிதி திரட்டப்பட்டதா, அவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் மோசடி அல்லது முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து CID விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here