கேகாலை ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

38
0
Spread the love

கேகாலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (18) இரவு நடைபெற்ற விருந்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விருந்தில் கலந்துகொண்ட குழுவினருக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஏர் ரைபிள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஹோட்டல் ஊழியர் எயார் ரைபிளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here