மின்மாற்றியை உடைத்து உபகரணங்கள் கொள்ளை,ஓமந்தையில் பரபரப்பு

183
0
Spread the love

வவுனியா, ஓமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியை (Transformer) இனந்தெரியாத நபர்கள் உடைத்து, அதிலிருந்த பெறுமதியான உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றி அகற்றப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மின்சார சபை அதிகாரிகள், மின்மாற்றி அகற்றப்பட்டிருப்பதை அவதானித்ததுடன், சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here