பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர் நானா படேகர் இன்று ( 8) அதிகாலை தனது 75-ஆவது வயதில் காலமானார். கோவாவின் டோனா பவுலா பகுதியில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், உயிர் பிழைக்க முடியாமல் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
அதிகாலை சுமார் 2:30 மணியளவில் நானா படேகர் தனது நண்பருக்கு “உடல்நிலை சரியில்லை” என்று செய்தி அனுப்பியிருந்த நிலையில் . நண்பர் அதைப் பார்த்து வீட்டிற்கு விரைந்தபோது, அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் (CPR) அளித்து உயிர் பெறச் செய்ய முயன்றும் எந்தப் பலனும் இல்லை. அதிகாலை 5:20 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
முதற்கட்ட ஆய்வின்படி கடுமையான மாரடைப்புதான் காரணம் எனக் கருதப்படுகிறது. மருத்துவ-சட்ட வழக்கு (MLC) பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நடைபெறும்.
அவரது மகன் மல்ஹார் படேகர் இந்தச் செய்தியை உறுதி செய்துள்ளார். “ஆம், செய்தி உண்மை. அவர் இயற்கை காரணத்தால் காலமானார்” என அவர் தெரிவித்தார்.
நானா படேகரின் மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ரஜினிகாந்தின் காலா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.







