சீனாவின் தொலைதூரப் பகுதியான திபெத்தில் கடந்த 22.10.2026 அன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாகப் பதிவான இந்தப் பேரழிவின் காரணமாகத் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனச் சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வெறும் 10 கிலோமீற்றர் ஆழத்திலேயே மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திபெத்தின் நாகு நகருக்குக் கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவிலும், தலைநகர் லாசாவிற்கு வடகிழக்கே 390 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள மலைப்பாங்கான பகுதியே நிலநடுக்கத்தின் மையப் புள்ளியாகும். இப்பகுதியிலுள்ள பாகென் கவுன்டியில் உள்ள மாரு நகரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பல அலுவலகச் சுவர்கள் வெடித்துச் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத் தாக்கத்தினால் அப்பகுதியில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ள நிலையில், மீட்புப் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனடன், அப்பகுதியில் இரண்டாம் கட்ட அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.







